உடுமலை: சிவசக்தி காலனியில் உள்ளது ராஜகாளியம்மன் கோயில். இக்கோயில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த 4-ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.. தினமும் காலை, மதியம், இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 11-ம் தேதி திருவிழா கம்பம் நடுதலும், 16-ம் தேதி இரவு முனி விரட்டுதலும், 17-ம் தேதி கும்பம் தாளித்தல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று முன்தினம் விநாயகர் கோலிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாவிளக்கு , பூவோடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.