சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் ஆஞ்சநேயர் கோவில் 1008 நெய் தீபம் ஏற்றப்பட்டது. மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும், சித்திரை மாத பிறப்பன்று காட்டுவனஞ்சூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 1008 நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர் மற்றும் நடராஜ அய்யர், அன்பழகன் செய்திருந்தனர்.