பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
11:04
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் மே 1ம் தேதியும், ஈஸ்வரன் கோயிலில் மே 2ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. தினமும் சுவாமி - அம்மன், கற்பகத்தரு, கிளி, பூதகி, குண்டோதரன், குதிரை, ராவண கைலாசம், ரிஷபம், நந்தி, அன்னம், யானை ஆகிய வாகனங்களில் காலை, மாலை வீதியுலா நடைபெறுகிறது. மீனாட்சி கோயிலில் மே 8ல் புஷ்ப சப்பரத்தில் பிச்சாண்டவர் புறப்பாடும், மே 9ல் திருமண மண்டபத்தில் சீர் வரிசை வைக்கப்படும். ஈஸ்வரன் கோயிலில் மே 8ல் திக்விஜயம், மே 9ல் விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலம், அன்று மாலை சுவாமி - அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மே 10ல் ஈஸ்வரன் கோயிலில், விசாலாட்சி அம்பிகா சமேத, சந்திரசேகர சுவாமிக்கு காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும், மீனாட்சி கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளது. இரண்டு கோயில்களிலும் மே 11 ல் காலை 10.30 மணிக்கு தேரோட்டம், மே 12 ல் கொடியிறக்கப்பட்டு, உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.