ஒடிஸா மாநிலத்தில் ஜாஜ்பூர் நகரில் வைதரணி நதிக்கரையில் பல கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓர் கோயிலில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராஹி, இந்திராணி, காளி எனப்படும் சப்த மாதர்களின் கரங்களில் தவழும் அழகிய குழந்தைகளுடன் சுமார் ஆறடி உயரத்தில் உருவச்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சப்தமாதர் சிலைகள் வேறெங்கும் இல்லை.