பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் பூச்சாட்டு உற்சவம் தொடங்கியது. வரும் 3ம் தேதி பூ கம்பம் நடுதல், 9ம் தேதி முனியப்பன் பூஜை, 10ம் தேதி உருவாரங்கள் எடுத்து வருதல், 11ம் தேதி பண்டிகை, மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 12ம் தேதி மஞ்சள் நீராட்டு வசந்த விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.