சேலம் மாவட்டம், தலைவாசல் அருகிலுள்ள ஆறகழுர் காமநாதீஸ்வரர் கோயிலில் உள்ள அம்பாள் பெரியநாயகியை பெரியம்மா என்று பக்தர்கள் உரிமையுடன் அழைக்கின்றனர். அம்பாள் முதிர்ந்த தோற்றத்தில் இருப்பதால் இவ்வாறு சொல்கின்றனர். அம்பாளுக்கு அலங்காரம் செய்யும் போது, முதியவர்கள் உடுத்தும் நூல்சேலை அணிவிப்பர். இவளிடம் வேண்டிக்கொண்டால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மனநிம்மதியும், அமைதியான மரணமும் அருளுவான் என்பது நம்பிக்கை.