சிவனடியார்க்கு அணிகலனாகத் திகழ்வது ருத்ராட்சம். இதை கண்டிகை எனவும், தாழ்வடம் எனவும் கூறுவர். ருத்ராட்சங்களில் பலமுகம் கொண்டவையும் உண்டு. 11 முகம் கொண்ட ருத்ராட்சத்துக்கு அதிதெய்வம் ருத்ரர். இதை அணிந்து வழிபட்டால், அசுவமேத யாகம் செய்த பலனையும், வாஜபேய யாகம் செய்த பலனையும், கோமேதகம் அணிந்தால் கிடைக்கும் பலனைவிட லட்சம் மடங்கு அதிக பலனையும் அளித்து, சகல சவுபாக்கியங்களையும் வழங்கும்.