தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயிலில் உள்ள பலிபீடம் மேருமலை போன்று அமைப்பில் பெரிதாக இருக்கிறது. நவதிருப்பதிகளில் ஒன்றான இக்கோயிலில், மூலவர் மீது தினமும் சூரிய ஒளி விழுகிறது. சூரிய ஒளி சுவாமி மீது விழ தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக பலிபீடத்தை சற்று தள்ளி அமைத்துள்ளனர். ஸ்ரீ வைகுண்டம் என்ற மகாவிஷ்ணு வசிக்கும் இடத்தின் பெயரிலுள்ள தலம் இதுமட்டும் தான் என்பது சிறப்பு. நாகப்பட்டினம் மாவட்டம் திருநாங்கூர்அரிய மேய விண்ணகரம் குடமாடுகூத்தன் கோயிலிலும் மேருமலை போன்ற அமைப்பில் பலிபீடம் உள்ளது.