திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருமழிசை எனும் திவ்ய தேசதலம். திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமென்பதால், அவரது பெயரே இத்தலத்திற்கு வழங்கப்படுகிறது. இங்குள்ள ஜெகந்நாதரை மங்களாசாசனம் செய்துள்ள இவருக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது. சிவனுடன் நேருக்குநேர். வாதம் செய்த இவரது கால்நகத்தில் ஒரு கண் உள்ளது. இது முக்காலத்தையும் உணரும் சக்தியை உடையது. மாணவர்கள் இவரை வணங்கினால், கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.