ஒருவர் இரண்டு நாய்களை வளர்த்தார். தெருவில் சென்ற யாரோ சிலர் ஒரு நாயைத்துன்புறுத்தியதில், அதன் பார்வை போய்விட்டது. இருந்தாலும், தனக்காக பலகாலம் உழைத்த அந்த நாயை முன்பை விட அன்புடன் கவனித்தார்உரிமையாளர்.கண்தெரிந்த நாயின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டி,அதனுடன் பார்வையற்றநாயையும் தெருவில் உலா வர தினமும் அனுப்புவார். மணிச் சத்தம் கேட்கும் பார்வையற்ற நாய், அதையே பின் தொடர்ந்து சென்று வந்து விடும்.கடவுளும் இப்படித்தான். ஒருவருக்கு உடலில் குறை என்றால், அதற்கு மாற்றுஏற்பாடாகவும் ஏதாவது செய்து வைத்து விடுவார். அதனால், உடலில் குறை உள்ளவர்கள் அதுபற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.தங்கள் மகன் ஆன்மிகத்தை வெறுப்பது குறித்து, ஒரு பெற்றோர் கவலைப்பட்டனர். என்னை நான் நம்புகிறேன்! எங்கிருந்து வந்தார் உங்கள்கடவுள், என்றான் அந்த மகன். இதுபற்றி ஒரு துறவியிடம் அவர்கள் முறையிட்டனர்.துறவி அழகாகச் சொன்னார். இதற்குப் போயா கவலைப்படுகிறீர்கள்! ஆன்மிகத்தின் அடிப்படையே தன்னம்பிக்கை தானே! மந்திரம் சொல்வதாலும், திருநீறு பூசுவதாலும் மட்டுமே ஆன்மிகம் சித்தித்து விடாது. இந்த தன்னம்பிக்கையக் கொண்டே, கடவுள் அவனையும் ஒருநாள் ஆன்மிகத்திற்குள் தள்ளிவிடுவார் பாருங்களேன்! என்றார்.ஆம்... தன்னம்பிக்கையை விடாதீர்கள். ஆன்மிகவலைக்குள் நீங்களாகவே ஒருநாள் அகப்பட்டுக் கொள்வீர்கள்.