விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த எஸ்.எஸ்.ஆர்., பாளையத்தில் ஆறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர் மதுரா எஸ்.எஸ்.ஆர்., பாளையத்தில் செல்வ வினாயகர், பால முருகன், முத்து மாரியம்மன் , சூல பிடாரியம்மன், கெங்கையம்மன், பக்த ஆஞ்சநேயர் கோவில்கள் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 9ம் தேதி மாலை முதல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் முடிந்து காலை 9 .10 மணி முதல் ஆஞ்சநேயர் , சூல பிடாரியம்மன், கங்கையம்மன் கோவிலுக்கும், காலை 10.15 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கலசத்திற்கு சிதம்பரம் , கொளக்குடி கல்யாணராம அய்யங்கார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.