பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில், பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை, 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
* கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் நடக்கிறது.
* பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.