பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
தர்மபுரி: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தர்மபுரியில், 26ம் தேதி ஒரிஸா பூரி ஜெகந்நாதர் தேர்த்திருவிழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இஸ்கான் இயக்கத்தின் பெரிய குருக்கள், பிரம்மசாரிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். விழாவில், ஹரிநாம சங்கீர்தனம், பகவத்கீதை, பாகவதம் உபன்யாசம் ஆகியவையும், சுபஜீவன் நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி மாலை, 3 மணிக்கு டி.என்.சி., விஜய்மஹாலில் தேர்த்திருவிழா துவங்குகிறது. நான்கு ரோடு, கடைவீதி, டி.என்சி., தியேட்டர் வழியாக, மீண்டும் விஜய்மஹாலை தேர் வந்தடையும். இதில், அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்க வேண்டுமென, இஸ்கான் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.