ராம நாமத்தை மந்திர அட்சரங்காளகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று அட்சரங்களாகும். ர என்பது அக்னி பீஜம். அ என்பது சூர்ய பீஜம். ம என்பது சந்திர பீஜம். அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும். சூர்ய பீஜம் ஞானம் அளிக்கும். சந்திர பீஜம் மனத்துயர் போக்கும். மனத்துயரை நீக்கி பாவங்கள் போக்கி ஞானம் அளிப்பது ராம நாமம் என்பது இதன் உட்பொருள்.