திருவேடகம் : திருவேடகம் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி மற்றும் பொங்கல் உற்சவ விழா துவங்கியது.விழாவின் முதல் நாள் அம்மன் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். நேற்று முன் தினம் எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன், நிர்வாக இயக்குனர் மணிமுத்தையா முன்னிலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. மாவிளக்கு, பொங்கல் படைக்கப்பட்டது.நேற்று மாலை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விளக்கு பூஜையில் மகளிர் சுய உதவிக் குழு தலைவி மாலதி தலைமையில் 150 பெண்கள் பங்கேற்றனர். பூஜாரிகள் மீனாட்சிசுந்தரம், தங்கப்பாண்டி விழா ஏற்பாடுகளை செய்துஉள்ளனர். ஆக., 7ம் தேதி வரை விழா நடக்கிறது.