பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
திருவள்ளூர் : மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, காரிய சித்தி கணபதி கோவிலில், சங்கட நிவாரண ஹோமம், இன்று நடைபெறுகிறது. பொன்னேரி வட்டம், பஞ்சேஷ்டியை அடுத்த நத்தம் கிராமத்தில், காரிய சித்தி கணபதி ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழாவை ஒட்டி, இன்று, காரிய சித்தி கணபதி சன்னிதியில் சங்கட நிவாரண ஹோமம், 1,008 மூல மந்திர ஹோமம், ஸகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம், ஸ்தபன கலசாபிஷேகம், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது.மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யபபட்டு, மதியம் 1:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.