Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கணபதி என்றிட கலங்கிடும் வல்வினை..! கணபதி என்றிட கலங்கிடும் வல்வினை..!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
03:08

பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9.00 - 10.30: விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்..

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar