திருமலை ராஜ கோபுரத்திற்கு இரவோடு இரவாக வெள்ளை பூச்சு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2014 11:09
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் ராஜ கோபுரத்திற்கு, இரவோடு இரவாக வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோவில் ராஜ கோபுரம், தற்போது வெண்மை நிற பூச்சுடன் உள்ளது. இதை பல வண்ணத்தில் மாற்ற, தேவஸ்தானம் முடிவெடுத்து, பணிகளை துவக்கியது. ஆனால் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காலம் காலமாக, ஏழுமலையான் கோவில் கோபுரங்களுக்கு வண்ணம் பூசப்படுவதில்லை. குளிர்ச்சிக்காக வெள்ளை நிற சுண்ணாம்பு கலவை மட்டுமே பூசப்பட்டது.
ஆனால், கோபுர சிற்பங்கள் சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, வண்ணப்பூச்சுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பக்தர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, நேற்று முன் தினம், இரவோடு இரவாக, கோவில் ராஜ கோபுரத்திற்கு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.