ரிஷிவந்தியம்: தீபாவளியையொட்டி ரிஷிவந்தியம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளியையொட்டி நேற்று ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி சென்னை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அபிஷேக பொருட்கள் மற்றும் சிறப்பு தேன் அபிஷேகமும் நேற்று நடந்தது.