திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி பஞ்சமுக விநாயகர் கோயிலில் நவ.,9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நவ.,8 அன்று இரவு 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதியுடன் துவங்குகிறது. நவ.,9 அன்று காலை 6 மணிக்கு 2ம் கால பூஜையும், காலை 6:30ல் இருந்து 7:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், அபிஷேகமும் நடக்கும். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சுள்ளம்பட்டியில் சமுதாய கூடம் திறப்பு, புது ஊரணிக்கரையில் விளையாட்டுத் திடல், திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெறும். அபிராமி ராமனாதன், நல்லம்மை ராமனாதன் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.