பதிவு செய்த நாள்
07
நவ
2014
05:11
சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ள பக்தர்கள், காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள். இவருடைய திருவுருவத்தை நிச்சயம் அவர்கள் பார்த்திருக்கக்கூடும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பெரும்பாலான சென்னை பக்தர்கள், காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகளின் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சென்னையில் இருந்து பயணிக்கும்போது செங்குன்றத்துக்கு முன்னால் வரும் புழல் அருகே இருக்கிறது காவாங்கரை எனும் சிறு கிராமம்.
இந்தத் திருக்கூட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சைட்பேக் எனப்படும் ஜோல்னா பையைத் தங்களது தோளில் மாட்டிக் கொண்டு செல்வர்கள். அதில், காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகள் திருவுருவப் படம் ஒரு பக்கம் இருக்கும். இன்னொரு பக்கம் இவர்களது அடியார் திருக்கூடத்தின் பெயர் இருக்கும். பொதுவாக இத்தகைய பக்தர்களை மற்றவர்கள், கண்ணப்பா குரூப் என்றே சொல்வார்கள். மௌனகுரு பகவான், சட்டிசாமி, சட்டிப்பரதேசி என்றெல்லாம் கண்ணப்ப ஸ்வாமிகளை அன்புடன் அழைத்து வருகிறார்கள் அவருடைய பக்தர்கள். மகான்களின் சிலர், மனிதர்களை விட்டு விலகிய இருப்பார்கள். அவர்களது அன்றாட நடவடிக்கைகளை சாதாரண பக்தர்கள் அதிகம் பார்க்க முடியாது. அதே நேரம், அந்த மகான்களின் செயல்பாடுகள் அனைத்தும் உலகத்தில் உள்ள சாதாரண மக்களின் தேவைகளையும் அவர்களது நலன்களையுமே சுற்றி இருக்கும்.
மகான்கள் வாழும் காலத்தில் எத்தனையோ பேரின் பிறவிப் பிணிகளைத் தங்களின் சக்திக்கு ஏற்றாவறு போக்குகிறார்கள். இவர்களை முழுவதுமாக நம்பி, சரண் அடைந்தால், எண்ணியது கைகூடும். இது எவருக்கும் விதிவிலக்கல்ல. வியாதிகளுக்குத் தீர்வாக இவர்கள் சொல்வது வியாதிகளின் தன்மையை அதிகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல. ஏன் நமக்கு இப்படி ஒரு தீர்வு சொல்லி இருக்கிறார்? என்று ஆராய முற்படக்கூடாது. ஷீரடி சாய்பாபா இதுபோல் பலரது உடல்நலத்தைக் காப்பாற்றி இருக்கிறார். ஒருமுறை குதிரையைத் தொலைத்துவிட்டுக் கவலையோடு வந்த பக்தர் ஒருவரிடம் முதலில் தான் புøக்கும் குழாயில், தூள்களை நிரப்பி, புøக்கச் சொன்னாராம் அவர். இங்கு நாம் தரிசிக்க இருக்கம் காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகளும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
காவல்துறையில் பணிபுரிந்த என்.கோவிந்தசாமி என்கிற அன்பர் கடும் எலும்புருக்கி நோயால் அவஸ்தைப்பட்டார். நான்கு விலா எலும்புகளை எடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் திர்மானமாகச் சொல்லிவிட்டார்கள். உடல்நோய் காரணமாக பணியில் இருந்து அவரை விலக்கி விட்டார்கள். இனியும் தான் பிழைப்போம் என்கிற நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தார் கோவிந்தஸ்வாமி. இந்த நிலையில் கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி யாரோ சிலர் அவரிடம் சொன்னார்கள். அவநம்பிக்கையுடன் ஸ்வாமிகளிடம் வந்தார் கோவிந்தஸ்வாமி. கவலையுடன் காணப்பட்டவரை அருகே அழைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டைக் கொடுத்துப் புகைக்கச் சொன்னார். பதறிப்போய்விட்டார் கோவிந்தஸ்வாமி ஐயையோ, எலும்புருக்கி நோயால் தவிக்கும் எனக்கு சிகரெட்டைக் கொடுத்து ஏன் புøக்கச் சொல்கிறீர்கள்? ஏற்கனவே இருக்கும் நோயை அதிகப்படுத்தாதா? ஆபத்தை வலியச் சென்று தேடுவதாக அல்லவா உங்கள் செயல் இருக்கிறது? என்று ஸ்வாமிகளிடமே கேட்டார்.
புன்னகைத்த ஸ்வாமிகள், இதைப் பிடி அன்பனே, <உனது நோய் எல்லாவற்றையும் இது போக்கிவிடும் என்று பதில் சொல்லி இருக்கிறார் அதன்படியே சிகரெட்டுகளை வாங்கித் தவிப்புடன் புகைத்தார் கோவிந்தஸ்வாமி. 3மாதங்கள் ஓடின.வழக்கம்போல் ஒரு நாள் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் கோவிந்தஸ்வாமி. அவரை முழுவதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் உடலில் வியாதி இருந்தற்கான அடையாளமே இல்லை. நீங்கள் பூரணமாக நலம் பெற்றுவிட்டீர்கள். ஏதோ ஒரு சக்திதான் உங்களை இந்த அளவுக்கு குணமாக்கி இருக்கிறது என்று கூறி, சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தனர். கோவிந்தஸ்வாமி ஓர் உதாரணம்தான். இப்படி எத்தனையோ பேரைப் பல வியாதிகளில் இருந்து காப்பாற்றி வாழ வைத்திருக்கிறார் காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள்.
ஷீர்டி பாபாவுக்கும் கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே எப்போதும் பிறந்தார்கள் என்கிற விவரம் தெரியாது. புøக்கும் வழக்கம் இருவருக்குமே இருந்தது. இருவருடைய ஆரம்ப நாட்களும் குடிசையில்தான் கழிந்தன. பாபா வசித்த இடத்தின் அருகே ஒரு வேப்பமரம் இருந்துபோல கண்ணப்ப ஸ்வாமிகள் வசித்த வீட்டின் அருகேயும் ஒரு வேப்பமரம் இருந்தது. இருவருமே சட்டி போன்ற ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்து பிட்சை எடுத்துதான் உண்டு வந்தனர். இதையே பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். அங்கங்களைத் தனிதனித்தனியாக பிரித்து வைக்கும் அகண்ட யோகம் இருவருக்குமே கைகூடி இருந்தது. ஷீர்டியில் இருக்கும் சிவன் கோயில் பூசாரியான மஹல்சாபதி சாய்பாபாவுக்கு நண்பரானதை போல, கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் கோவிந்த ராவ் ஸ்வாமிகள் என்கிற நண்பர் ஒருவர் இருந்தார். கண்ணப்ப ஸ்வாமிகள் கேரள பூமி, கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இவருடைய தாய் எரமத்து என்னும் கிராமத்தையும் தந்தை செனியஞ்சால் என்ற கிராமத்தையும சேர்ந்தவர்கள். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது மாதிரி பின்னாளில் காவாங்கரையில் தான் தங்கி இருந்த குடிசையின் முகப்பில், எரமத்த செனியஞ்சாலு பிறந்தது மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள் என்று எழுதி வைத்திருந்தாரம்.
சிறு வயதிலேயே கப்பல் ஏறி சிங்கப்பூர், மலேயா முதலான நாடுகளுக்குச் சென்றுவிட்டார். பல வருடங்கள் அங்கேயே இருந்தார். இதன்பின் ஒரு கட்டத்தில் சென்னை திரும்பிய அவர் செங்குன்றம் பகுதிக்கு வந்தார். 1948ம் வருடம், காவாங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார் கண்ணப்ப ஸ்வாமிகள். அப்போது அவருடன் கோவிந்தராவ் ஸ்வாமிகள் (இவர் தற்போது இல்லை, கண்ணப்ப ஸ்வாமிகளின் நினைவாலயத்தில் இருவருக்கும் சமாதி இருக்கிறது) நாகப்ப ரெட்டியார் போன்ற வேறு சில அன்பர்களும் இருந்தனர். திடீரென்று ஸ்வாமிகள், ரெட்டியாரைப் பார்த்து ரெட்டியாரே, நைனா காந்தியை சுட்டுக் கொன்று விட்டார்கள். என்றார் (எல்லோரது பெயருக்கும் முன்னால் நைனா என்று சேர்ப்பாராம் கண்ணப்ப ஸ்வாமிகள்). சுதந்திரம் கிடைத்து, காந்திஜியின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம் அது. காந்திஜியை சுட்டுவிட்டார்கள் என்று ஸ்வாமிகள் சொன்னதும் ரெட்டியார் உட்பட அனைவரும் பதறிவிட்டனர். என்ன சாமி? பெரிய குண்டாத் தூக்கிப் போடுறீங்க? என்றனர். ஸ்வாமிகள் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் காந்திஜி சுடப்பட்டதாகச் செய்தி வந்தது.
இதுபோல், ரமண மகரிஷி ஜீவமுக்தி ஆன நிகழ்வையும் நாகப்பரெட்டியாரிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் கண்ணப்ப ஸ்வாமிகள். அன்றைய தினம் இரவு வானில் ஒரு ஜோதி மிகப் பிரகாசமாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து ஐந்த நிமிடங்கள் காணக் கிடைத்த அந்த ஜோதியைத் தரிசித்தார். பிறகு, ரெட்டியாரிடம் ஒரு மகான் மறைந்துவிட்டார். ஜோதி சொரூபமாக அவர் பயணிக்கிறார் என்று ஆகாயத்தைப் பார்த்துச் சொன்னாராம். கண்ணப்ப ஸ்வாமிகள் காவாங்கரை அருகே ஒரு குடிசையில் வசித்து காலத்தில் அந்த வழியே செல்லும் சிலர் அவருடைய வீட்டுக்குள் எட்டிப் பார்த்து. ஆசி வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை நேரத்தில் வயலை உழுவதற்காக மாடுகளை ஒட்டிச் செல்லும் விவசாயிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி ஒருநாள் உள்ளூர் விவசாயிகள் ஸ்வாமிகளின் குடிசையைக் கடந்தபோது, ஆசி வாங்குவதற்காக உள்ளே நுழைந்தனர்.
உள்ளே கண்ட காட்சி அவர்களை உறையை வைத்தது. அந்த நேரத்தில் அகண்ட யோகத்தில் இருந்தார். ஸ்வாமிகள். கை கால்,தலை, உடல் என்று அனைத்து உறுப்புகளும் தனித்தனியாக இருப்பதைப் பார்த்த விவசாயிகள் கலப்பையை அப்படியே போட்டுவிட்டு நம்ம சாமியை யாரோ கொன்னு போட்டுட்டாங்க என்று ஊருக்குள் தகவல் பரப்பினர். சற்று நேரம் கழித்து தன் அகண்ட யோகத்தை முடித்து கண்ணப்ப ஸ்வாமிகள் குடிசையை விட்டு வெளியே வந்தார். தன் குடிசை முன் ஏராளமானோர் திரண்டு நிற்பது ஏன் என்று கேட்டார். சற்று முன் அவரை அக்கு வேறு ஆணி வேறாகப் பார்த்த விவாசயிகள். முழு உடலுடன் பார்த்தபோது குழம்பிப் போனார்கள். அதன்பிறகே ஸ்வாமிகள் அவர்களிடம் அகண்ட யோகம் பற்றிச் சொல்லித் தெளிய வைத்தார். கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர் ஒருவரால் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு வருடம் சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த பக்தருக்கு வருத்தம். சபரிமலையில் மகரஜோதி தென்படும் நாளன்று அந்த பக்தர், காவாங்கரைக்கு வந்தார். பக்தனின் குறையை அறிந்தார் ஸ்வாமிகள். அப்போது மாலை நேரம் சூரியனும் மறைய ஆரம்பித்தார்.
என்னப்பா, சபரிமலைக்குப் போய் ஜோதி பார்க்க முடியலேன்னு வருத்தமா? என்று கேட்டார். ஆமா சாமீ. வா என் பின்னால் என்ற ஸ்வாமிகள், விறுவிறுவென்று அருகில் இருக்கும் ஏரிக்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும், ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்தார். ஒரு மேடான இடத்தை அவர்கள் அடைந்தனர். பக்தனை அருகே அழைத்த ஸ்வாமிகள் மேலே ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி. அங்கே பார், நீ காண விரும்பிய காந்தமலை ஜோதி. நன்றாகத் தரிசித்துக்கொள் என்றார். ஸ்வாமிகள் காட்டிய திசையைக் கவனித்த பக்தர் விதிர்விதிர்த்துப் போய்விட்டார். சபரிமலையில் இருந்தால் எப்படி ஜோதியைத் தரிசிக்க முடியுமோ, அதுபோல் காவாங்கரையில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சியைத் தரிசித்தார் பக்தர். கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் ஐயப்பனுக்கும் எப்படி ஒரு தொடர்பு ஏற்ப்பட்டது.