Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்ந்த அமைதியின் சொர்க்கம்! மனிதனும் தெய்வமாகலாம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2014
02:11

சாய்பாபாவிற்கு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் என்றால் எப்போதுமே தனிபிரியம். அவர்களுடன் பேசும் போதும் நேரத்தைச் செலவிடும்போதும் நிறைய விஷயங்களைச் சொல்வார். “இறைவன் வாரி வழங்கியுள்ள அருட்கொடையில் மாணவர்கள் கைக்கொள்ள வேண்டியது இரண்டாகும். ஒன்று திடநம்பிக்கை.. மற்றொன்று பொறுமை.. இவ்விரண்டும் கைவரப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். பற்று என்பது நம்முடைய பொருளின் மீது வைக்கும் விருப்பத்தைக் காட்டும். ஆசை என்பது பிறருடைய பொருள் மீது வைக்கும் விருப்பத்தைக்  குறிக்கும். நமக்கு பற்றும் வேண்டாம் ஆசையும் வேண்டாம். தியானம், தர்மகுணம் உள்ளவரையே எல்லோரும் விரும்புவர். அவருடைய நட்பிற்காக பலரும் போட்டியிடுவர். அவையில் எப்போதுமே அவருக்கு தனி மதிப்பு உண்டு. இறுதிக்காலம் அவருக்கு சாந்தியும் மகிழ்ச்சியும் தரும். இன்றைய இளைஞர்கள் தாங்கள் ரொம்ப படித்துவிட்டதாலேயே தங்களுக்கு அதிகம் தெரியும். தங்கள் தாய்க்கு எதுவும் தெரியாது நினைக்கிறார்கள். இது பெரிய தவறு. தாயைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்களுக்கு தெரிந்தது எதுவும் உங்களுக்கு தெரியாது  என்பதே நிஜம். தாயின் பரிவும் பாசமும் உங்களுக்கு உண்டா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.  பெற்றோரே கண்கண்ட தெய்வங்கள்.  வளர்த்து ஆளாக்கிய  தாயைக் காட்டிலும் சிறந்த ஏகாயில்  ஏவறெங்கும் கிடையாது. ராவணன் எவ்வளவோ கற்று இருந்தாலும், அறியாமையில் மூழ்கி கற்ற விஷயங்களை  பின்பற்றாததால் தான் கெட்ட பெயரோடு அழிந்து போனான்.

ஆகவே தர்மத்தை, நியாயத்தை, மனிதத்தை போதிக்கும் கல்வி கற்றவர்கள் அதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். படைப்பின் எல்லா  உயிரினங்களிலும் தன்னைப் பார்ப்பவனும், தன்னில் எல்லா உயிரினங்களையும் காண்பவனும் வருத்தம் என்பதை அறிய மாட்டார்கள். நடைபெறும் நிகழ்வுகளால் யாரும் குழப்பமோ கஷ்டமோ அடைவதில்லை. அந்த மாதிரி நடப்பது பற்றி, தாங்கள் கொள்ளும் அபிப்பிராயங்களால்தான் தொந்தரவு கொள்கிறார்கள்.  மாற்றத்தை விரும்பும் ஒருவர் அந்த மாற்றம் ஏற்படும் முன்பாக அவர் அந்த மாற்றமாக மாறிவிட வேண்டும். ஒன்றை உங்களால் செய்யமுடியும் என்று எண்ணினால் ஒருவேளை அதை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆனால், அது உங்களால் முடியாது என்று நினைத்து கொண்டால் நிச்சயமாக அதை நீங்கள் செய்யவே முடியாது.  ஒன்றை எதிர்பார்த்து அது  சற்றும் எதிர்பாராமல் நடந்துவிட்டால் அந்த அற்புதத்தை கடவுளே  நிகழ்த்தியுள்ளதாக  கருதுங்கள்.நேற்று என்பது இன்றைய நினைவு அவ்வளவே! நாளை என்பது இன்றைய கனவாகும்.  மாணவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும், நல்லதைச் செய்ய பிறரையும் ஊக்குவிக்கவும் வேண்டும். மனதை மேம்படுத்தி நல்ல உணர்வுகளை வளர்க்கும் விதத்தில் கல்வி அமைய வேண்டும். படிக்கும் காலத்தில் இருந்தே ஆசைக்கு ஒரு வரையறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி கற்றவன் தியாக மனப்பான்மையுடன் மற்றவருக்கு சேவை செய்ய முன் வரவேண்டும்.  படிப்பின் மூலம் பெறும் அறிவை நேர்மையான வழியில் பயன்படுத்தி, பணம் சம்பாதிப்பதோடு தன்னால் ஆன நன்மையைச் சமூகத்திற்கும் வழங்கவும் வேண்டும். படித்தவனுக்கு பண்பாடும், ஒழுக்கமும் இரு கண்கள். கல்வி கற்றதன் அடையாளமே பணிவுடன் நடந்து கொள்வது தான். விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்வதோடு மாணவர்கள் மெய் ஞானமான ஆன்மிக அறிவையும் பெறுவது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar