திருவாரூர் திருத்தலத்தில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் அட்சரபீட வடிவில் அம்பிகை அருவமாகக் காட்சி தருகின்றாள். காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் அம்மன் நெருப்பு வடிவில் வழிபடப்படுகிறாள். திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள படவேடு என்னும் தலத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி, லிங்க வடிவில் காட்சி தருகிறாள். கொல்லூரில் மூகாம்பிகையாக சுவர்ணரேகையுடனான லிங்க வடிவில் அருள்கிறாள். சவுராஷ்டிரத்தில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான சோமநாத்தில் அம்பிகை நதி வடிவில் வழிபடப்படுகிறாள். தேவி தவம் இருந்த தலமாகக் கூறப்படும் மானச சரோவரில் பச்சை நிற ஏரி வடிவில் அம்பிகை காட்சி தருகிறாள். திருக்குற்றால மலையில் அன்னை பராசக்தி யோகபீட நாயகியாக விளங்குகிறாள்.