உத்திரப் பிரதேசம் ஹரித்வாரில் கோயில்கள், ஆசிரமங்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பவன்தாம் என்ற ஆசிரமம். இங்கே வண்ண வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்ட கணபதி, ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், ராதாகிருஷ்ணன், துர்க்கை, அர்ஜுனனோடு ரதத்தில் பார்த்தசாரதியாக கிருஷ்ணர், லட்சுமி நாராயணன், பகவான் கிருஷ்ணபரமாத்மாவின் விஸ்வரூபம் என பல்வேறு தெய்வ உருவங்களைக் காணலாம். இவை கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளதால் பார்க்க ரம்மியமாக இருக்கும். அதுதவிர பெரிய ஹாலில் பிரம்மாண்டமான கண்ணாடி ரதம், குதிரைகள், சாரதியாக கிருஷ்ணர், வில்லேந்திய அர்ஜுனரையும் தரிசிக்கலாம்.