பதிவு செய்த நாள்
16
ஜன
2015
12:01
கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள கோவில்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பூஜை நடந்தது. கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில், சக்திமலை முருகன் கோவில், தேன்மலை முருகன் கோவில், டானிங்டன் பிள்ளையார் கோவில்களில், அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது.வீடுகளில் பொங்கல் வைத்த மக்கள், புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் ”வாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு, கோத்தகிரி பகுதியில், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.