திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம் நாளை(ஜன.29) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கோயிலில் ஏழாம் திருவிழாவாக நேற்று காலை 9 மணிக்கு சப்பரத்தில் கங்காளநாதர், இரவு ரத்தின சிம்மாசனத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடாகினர். இன்று (ஜன.28) காலை விடையாத்தி சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடும், இரவு பச்சை குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.நாளை(ஜன. 29) காலை 10 மணிக்கு தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. ஜன.30ல் தெப்பத்திருவிழா நடக்கிறது.