திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தியில், திருக்கல்யாண உற்சவம், நேற்று விமரிசையாக நடந்தது. ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பங்கேற்க, காளஹஸ்தீஸ்வரன், யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன், சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். அர்ச்சகர்கள், சைவ ஆகம விதிப்படி, திருமண உற்சவத்தை நடத்தினர்.