பதிவு செய்த நாள்
25
பிப்
2015
12:02
கோபி : கோபி, பச்சமலையில் அருள்பாலிக்கும், சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு, சதூர்த்தி மகா அபிஷேகம் மற்றும், 108 சங்காபிஷேகமும், மார்ச், 4ல் நடக்கிறது. அன்று காலை, 8 முதல், 11 மணி வரை நடராஜர் மகா ஹோமம், 11 மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. நடராஜரின் மகா அபிஷேகத்துக்கு தேவையான, தேன், பசு நெய், பால், தயிர், திருமஞ்சனப்பொடி, சந்தனம், பன்னீர், விபூதி, பூ ஆகியவற்றை விருப்புமுள்ளவர்கள் வழங்கலாம். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் செய்து வருகிறார்.