பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
11:06
கோபிசெட்டிபாளையம்: கோபி, புதுப்பாளையம், நாயக்கன்காடு அண்ணமார் ஸ்வாமி கோவிலில் பொங்கல் விழா நடக்கிறது. இவ்விழா ஜூன் 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், தீர்த்தக்குடத்துடன் படைக்கலம் அண்ணமார் கோவிலுக்கு செல்லுதல், பச்சை பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு மேட்டுவளவு பிள்ளையார் கோவிலில் இருந்து அண்ணமார் கோவிலுக்கு கரகம், மாவிளக்கு படைக்கலத்துடன் வந்து சேருதல், இரவு 11 மணிக்கு அலங்கார வாண வேடிக்கை, 12 மணிக்கு பால் ஆவி பூஜை, பெரும் பூஜை, பால் பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 3 மணிக்கு நிலப்பரண் பூஜை, 3.05 மணிக்கு உச்சி கரும்பு பூஜை, காலை 7 மணிக்கு பன்றி வேட்டையாடல், காலை 8 மணிக்கு கிளி வேட்டையாடல், பன்றி தாரை எடுத்தல், காலை 9 மணிக்கு பொங்கல் வைத்தல், 11 மணிக்கு பொங்கல் பானை ஏறுதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து உச்சி கால பூஜை, படுகளம் சாய்தல், களி உண்ணும் பூஜை, காவு சோறு சூறையிடுதல் நடக்கிறது. இரவு ஒரு மணிக்கு சாம்புவன் ஆட்டம், சாம்புவன் படைப்பு நிழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு மஞ்சள் நீர் ஆடுதல், மாலை 6 மணிக்கு தன்னாசி பூஜை, பட்டு போர்த்தல், ஜூன் 27ம் தேதி மறு பூஜை நடக்கிறது.