பாகூர்: பாகூர் முத்தாலம்மன் கோவிலில், 2ம் ஆண்டு 108 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது. பாகூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவி லில் இருந்து 108 பால் குட ஊர்வலம் புறப்பட்டு, முத்தாலம்மன் கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு, உலகம் நலம் பெற வேண்டியும், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும், அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.