நத்தம் : நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் புறப்பாட்டை தொடர்ந்து ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து அம்மனை வரவேற்றனர். இப்பகுதியை சேர்ந்த சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் வாழும் தமிழர்கள் உட்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.