Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் சைவ சமய ... மணக்குள விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்! மணக்குள விநாயகர் கோவிலில் யாகசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

01 ஏப்
2015
11:04

கோவை : மேலைச்சிதம்பரம் என்று பக்தர்கள் போற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று, கோலாகலமாக நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திரத்தேர்த்திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பச்சைநாயகியம்மன் உடனமர் பட்டீஸ்வர சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, யாகசாலை, வேள்வி பூஜைகள் நடந்தது. அபிஷேகம் நிறைவடைந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலை வலம் வந்த சுவாமி, தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டார். பக்தர்கள் தேரில் வீற்றிருக்கும் சுவாமியை வழிபட்டனர்.நேற்று மாலை தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரசு அதிகாரிகள், ஆதினங்கள், சிவாச்சாரியார்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் மெல்ல மெல்ல நகர்ந்தது. நிலையிலிருந்து புறப்பட்ட தேர், சிறுவாணி சாலை, மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக தேர்நிலையை அடைந்தது. தேர் சென்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேரின் மீது, உப்பு, பழம் ஆகியவற்றை வீசியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவையொட்டி போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar