கோபி: கோபி, பவளமலை முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காலை, 7 மணிக்கு பால் அபிஷேகம், 8 மணிக்கு "சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை, காலை, 9 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9 மணி நிலவரப்படி, 400 அர்ச்சனை டிக்கெட்கள் மற்றும் 920 திரிசதை அர்ச்சனை டிக்கெட்கள் விற்பனையானது.மூலவர் முத்துக்குமார சுவாமி, வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.