நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் நேற்று விஷூ கனி தரிசனம் நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு கோமாதா தரிசனம் நடைபெற்றது. அம்மன் மூலஸ்தானம் திறந்ததும் கோமாதாவை தரிசிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல மாவட்டத்தின் பெரும்பாலான கோயில்களிலும் நேற்று கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழைபழக்குலைகள், காய்கள், கனிகள் குவித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் இவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு நாணயங்கள் கை நீட்டமாக வழங்கப்பட்டது. கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் நடத்தினர். எனினும் கேரள முறைப்படி சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இன்று கணி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.