பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
போடி : போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி ஏப்., 22 வரை ஏழு நாள் நடக்கிறது. இன்று போடி பெரியாண்டவர் கோயிலிருந்து சிவன் மற்றும் திரு உண்டியலை நகரின் முக்கிய ரோடு வழியாக மலை கோயில் கொண்டு செல்கின்றனர். விழாவினை முன்னிட்டு சிவனுக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. தினமும் சிறப்பு அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடக்கும். போடி மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்படும். தக்கார் பாலகிருஷ்ணன், விழா கமிட்டி தலைவர் வடமலை ராஜய பாண்டியன், செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், முத்துராஜன்,சிவக்குமார், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.