ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஏப்., 8 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தது. கடைசி நாளான நேற்று விரதம் இருந்த பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, பால்குடம், அக்னிசட்டி எடுத்து கோயில் முன் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.