மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலயத்தில் திருப்பணி நடந்து வருவதால் ஸதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா எம்.எஸ்.ஏ.பி., உண்ணாமலை அம்பாள் திருமண மகாலில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது.ஸதாசிவ பிரம்மேந்திராளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பின் காலை அஸ்வத்ஸ்ரீமான்,பவர்ணா பிரியதர்ஷினி பாடலுடன் விழா தொடங்கியது.நேற்று பகல் முழுவதும் ஏராளமான கர்நாடக இசை பாடகர்கள் பாடல்கள் பாடினர்.3 நாட்கள் நடைபெறும் ஆராதனை விழாவில் இன்று காலை உஞ்சவிருத்தி நடக்கிறது. மாலையில் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது.நாளையுடன் ஆராதனை விழா நிறைவு பெறுகிறது.