பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த ௧௫ம் தேதி துவங்கி நடந்து வரு கிறது. பிரம்மோற்சவ விழாவில், நாளை 29ம் தேதி தேரோட்டம், 30ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா, 31ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் முகமது மன்சூர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், விழாவின்போது பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. எஸ்.பி., பழனிவேல், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.