திருத்தணி : புச்சிரெட்டிப்பள்ளி அடுத்த,வேணுகோபாலபுரம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு பூகரகம் ஊர்வலம் நடந்தது. இரவு 7 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு அம்மன் மற்றும் கரகம் கிராம வீதிகளில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணிக்கு நாடகம் நடந்தது.