சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2011 11:07
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா இன்று துவங்குகிறது. ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் சேதுநாராயணப்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்திலும் ஏழுவிதமான வாகனங்களிலும் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். தினமும் கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜையும், வெளியே அமைக்கப்பட்ட ஆண்டாள் அரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, திவ்யநாம பஜனைகள், பக்தி இன்னிசை கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சிகள் நடைபெறும். 5ம் நாள் சேதுநாராயணப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை திருமணம் செய்யும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இறுதிநாள் தேரோட்டமும் நடைபெறும். இன்று கொடியேற்றமும், யாகசாலை பூஜைகளும் மாலை சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் சேவாசமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர் உட்பட நிர்வாகிகள் செய்துள்ளனர்.