பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
11:07
ஆழ்வார்குறிச்சி : கடையம் சித்தி விநாயகர் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடையம் வடக்கு ரதவீதியில் பத்திர பதிவாளர் அலுவலகம் அருகே சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 62 ஆண்டுகளுக்கு பின் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கடந்த ஏப்.21ம் தேதி பாலாலயம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம், பஞ்சகவ்யம், தேவமாதா அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், பிரம்மாச்சார்ய பூஜை, கோ பூஜை, அலங்கரிப்பட்ட யானைக்கு சிறப்பு கஜ பூஜை ஆகிய வைபவங்களுடன் விழா துவங்கியது. இரவு ஆன்மீக சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணியளவில் இலஞ்சி ஆர்.பி.மேல்நிலைப்பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன், சரோஜாநாதன், கோவில்பட்டி சங்கர், வெற்றிவேல் செல்வி ஆகியோர் முன்னிலையில் விக்னேஷ்வர பூஜை, பிம்ப சுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், 2ம் யாகசாலை பூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் ஆகியன நடந்தது. பின்னர் மேளதாளங்களுடன் கடம் புறப்பட்டு சிவகாசி பாலாஜி, கோவில்பட்டி மணிகண்டன், கடையம் தில்லைநாயகம், சரவணன் மற்றும் வைதீகர்கள் சித்தி விநாயகர் விமானம், சாலக்கோபுரம் ஆகிய விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் மூலஸ்தானத்தில் மகா அபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. தூத்துக்குடி வேதபாடசாலை சதீஷ்குமார் சிவாச்சாரியர் தலைமையில் யாகசாலை வேதபாராயணம் நடந்தது. கழுகுமலை அறுபத்தி மூவர் குருபூஜை குழு செயலர் கணபதி தேவார இசை சொற்பொழிவு நடத்தினார். கும்பாபிஷேக விழாவில் நிர்வாக அதிகாரி முருகன், கணக்கப்பிள்ளை பொன்னு, கோயில் ஊழியர் மாணிக்கம், கைலாசநாதர் பக்த பேரவை தலைவர் நல்லாசிரியர் மீனாட்சிசுந்தரம், பணிநிறைவு தாசில்தார் கல்யாணசுந்தரம், கிரகலட்சுமி சீனிவாசன், பஞ்., தலைவர் சண்முகம், கடையம் பாரதி லயன்ஸ் சங்க தலைவர் முருகன், கோபால், பத்திர பதிவாளர் முருகன், லயன்ஸ் சங்க பொருளாளர் பால்சிங், அபிராமி அண்ணாமலை குமரேசன், கடையம் சர்வோதயா சிவபாலசுப்பிரமணியன், அட்வகேட் லெட்சுமணன், டி.டி.சி கோமு, இருளப்பபிள்ளை, கடையம் கரடிமாடசாமி கோயில் பசுங்கிளியாபிள்ளை, சமையல் பழனியாபிள்ளை உட்பட வடக்கு ரதவீதி பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆய்வாளர் சுப்புலட்சுமி, தக்கார் முருகன் மேற்பார்வையில் பரம்பரை அறங்காவலர் சங்கர் மற்றும் கும்பாபிஷேக திருப்பணி ஒருங்கிணைப்பாளர்கள், கடையம் கல்யாணி சிவகாமிநாதன், மீனாட்சிசுந்தரம், கழுகுமலை சோமசுந்தரம், ஈரோடு பிரேமா வள்ளிநாயகம், நெல்லை ஜெயபால், கடையம் கல்யாணிசுந்தரி சுப்பிரமணியம், சங்கர்ராமலிங்கம், பழனியாபிள்ளை, மதுரை சோனாசலம், பெங்களூரு ஆறுமுகம், ஈரோடு சண்முகநயினார், ஜனகா செய்திருந்தனர்.