பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நடந்து வருகிறது. இதனால் பெரியகுளம் பஜார்வீதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் சைக்கிள், இருசக்கர வாகனங்களை தவிர எந்த வாகனங்களும் அனுமதிப்பதில்லை. ஆனால் ஆட்டோக்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கோயில் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. உற்சவமூர்த்தி அம்மன் வீதி உலா வருவதற்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. போக்குவரத்து போலீசார் யாரும் வராததால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போதுமான போலீசாரை கோயில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மாவட்ட போலீஸ்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.