கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மிளகாய் தோட்டம், தேவி கருமாரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலை, மிளகாய் தோட்டம் பகுதியில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக தேவி கருமாரி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏமப்பேர் ஏரிக்கரையில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சின்னமன் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடத்தை ஏந்தி ஊர்வலமாக சென்று, கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.விழாவில் கோவில் நிர்வாகி சண்முகம், வார்டு கவுன்சிலர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.