அகத்தியருக்கு குருவாக இருந்தவர் முருகன். இவருக்கு முருகனேஅகத்தியம் என்ற இலக்கணத்தை கற்றுக் கொடுத்தார். அகத்தியர் அதை பாண்டிய மன்னனுக்கு கொடுத்தார் என திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையிலுள்ள பழைய பாபநாசத்தில் அகத்தியருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் அகத்தியர் அருவி எனப்படுகிறது. அவரது கமண்டல நீரே தாமிரபரணி நதியாக ஓடுகிறது.