Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிகாலையில் தூங்காதீர்! நாளை நம் கையில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உழைப்பே உயிரெனக் கொள்வோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
05:08

உழைப்பினால் மனிதனின் மதிப்பு அதிகமாகச் சுடர்விட்டு பிரகாசிக்கும். இதை நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்வார்கள். தங்கள் செருப்புகளைத் தாங்களே செப்பனிட்டுக் கொண்டார்கள். தங்கள் உடைகளைத் தாங்களே தைத்துக் கொண்டார்கள். தங்கள் துணைவி யருக்கு ஒத்தாசை செய்தார்கள். தங்கள் ஆடுகளிடம் தாங்களே பால் கறந்தார்கள்.வெளியிலும் அவர்கள் தங்கள் தோழர்களுடன் சேர்ந்து வேலை செய்வார்கள். மதீனா சென்றடைந்ததும், அவர்கள் கட்டத்தொடங்கிய மஸ்ஜிதுக்காக மற்றவர்களுடன் சேர்ந்து நாயகம்(ஸல்) அவர்களும் கல் சுமந்தார்கள். அப்போது அவர்களது தோழர்கள்,பெருமானே! எமது உயிர்கள் உங்களுக்கு குர்பானியாகட்டும்!  நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து கடினமான பணிகளைச் செய்தார்கள்.ஒரு சமயம், அவர்கள் தங்கள் தோழர்களுடன் பயணம் செய்யும் போது, வழியில் உணவு சமைப்பதற்காக விறகு சேகரித்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது தோழர்கள், இறைyதே! இந்த வேலையை நாங்களே செய்து கொள்ள முடியும்! என்றனர்.அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், அது உண்மை தான். ஆனால், நான் உங்களை விட உயர்வான ஸ்தானத்தில் என்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தன் தோழர்களை விட தன்னை உயரிய நிலையில் வைத்திருப்பவனை அல்லாஹுத் தஆலா நேசிக்கமாட்டான், என்று பதிலளித்தார்கள்.புரிந்து கொள்ளுங்கள்! எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவரவர் கடமைகளை அவரவரே செய்ய வேண்டும். உழைப்பே உயிரென வாழ வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar