Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை விருத்தி செய்வோம்! திரும்பத் திரும்ப தொந்தரவு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூமித்தாய் குலுங்க என்ன காரணம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2015
06:08

பாடல்
அகத்தினைக் கொண்டிப் புவிமேல் சிலதினத்து மற்றொன்று உற்றறி யாதுபின்அவத்துள் வைக்கும் சித்த சனாரடு கணையாலேஅசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெஅலக்கணிற் சென்றுத் தடுமாறியே சிலநாள்போய்இகத்தை மெய்க்கொண்டிப் புவி பாலர்பொன்மயக்கில் உற்றம் பற்றை விடாதுடல்இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயேஎமக் கயிற்றின் சிக்கினி லாமுனுன்மலர்ப் பதத்தின் பத்திவிடாமனது இருக்கு நற்றொண்டர்க்கு இணையாகவும் அருள்தாராய்புகழ்ச் சிலைக்கந் தர்ப்பனுமே பொடிபடச் சிரித்தண் முப்புர நீறுசெய் புகைக் கனற்கண் பெற்றவர் காதலி அருள்பாலாபுவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றும் செற்றிடவே பகைபுகட்டி வைக்கும் சக்கிரபாணி தன் மருகோனேதிகழ்க் கடப்பம் புட்பம் தார்புயமறைத்து ருக்கொண்டற் புதமாகியதினைப் புனத்தின் புற்றுறை பாவையை அணைசீலாசெகத்தில் உச்சம் பெற்ற அமராவதியதற்கு மொப்பென உற்றழகே செறிதிருக்கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே.


பொருள்: ஆசையை வளர்க்கும் கரும்பு வில்லை ஏந்திய மன்மதனை துõள்துõளாக எரியச் செய்தவனே! முப்புரங்களில் இருந்த அரக்கர்களை எரித்து சாம்பலாக்கிய மாவீரனே! புகையோடு கூடிய தீயை வெளிப்படுத்திய நெற்றிக்கண் கொண்ட சிவனின் துணைவி பார்வதி பெற்ற புதல்வனே! போர் நிகழ்வதற்கு காரணமானவர்களுக்குள்ளேயே பகை மூட்டி அழித்தவரும், சக்கரத்தைக் கொண்டவருமான திருமாலின் மருமகனே! கடப்பமலர் மாலை அணிந்த தோள்களைக் கொண்டவனே! அற்புதமான தினைப்புனத்தில் மகிழ்ச்சியுடன் காவல் காத்த வள்ளியை தழுவி நின்ற நீதி தேவனே! இவ்வுலகத்திலேயே மேன்மை பெற்றதும், தேவலோகத்திலுள்ள அமராவதி நகரத்திற்கு ஈடானதுமான திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே! நான் சொல்வதைக் கேள்.  இவ்வுலகில் சிலகாலம் இல்லற வாழ்க்கை வாழ்ந்தேன். பிறகு, மன்மதன் செலுத்திய அம்பினால் நல்லநெறி தவறினேன். பயனற்ற வழியில் மனம் செல்ல, துõய்மை அற்றதும், மைபூசியதுமான கண்களால் அழைக்கும் மாதர்களின் சிரித்துப் பேசும் பொய்யான வலையில் விழுந்து தடுமாறி வாழ்நாளில் துன்பத்தை அடைந்தேன். இம்மண்ணுலக வாழ்வை உண்மை என்று எண்ணி, உலகம், பிள்ளைகள், பொன், பொருள் என்னும் மாயைக்குள் சிக்கித் தவித்தேன். இளைப்பு, பித்தம் ஆகிய நோய்களுக்கு ஆளாயினேன். இனி, முடிநரைத்து கிழப்பருவம் அடைந்தும் கொடிய எமனின் பாசக்கயிற்றில் சிக்கி உயிர் விடுவதற்குள், உனது தாமரை போன்ற திருவடியில் பக்தி செலுத்தும் அடியார்களில் நானும் ஒருவனாகும் பாக்கியத்தை தந்தருள்.

விளக்கம்: ஒழுக்கமின்மை தான் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை இடர்களுக்கு அடிப்படை. கொஞ்சம் கூட பக்தி சிரத்தையில்லாமல், ஏனோதானோவென வாழ்க்கை நடத்துவதால் தான், பூமித்தாய் பொறுக்க முடியாமல் குலுங்கி விடுகிறாள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு சம்பளக்கல்வியே போதிக்கப்படுகிறது. ஆன்மிகக்கல்வியும் போதிக்கப்பட வேண்டும். சின்ன வயதிலேயே ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் கற்றுத்தரப்பட்டால், குழந்தைகள் நல்ல மனநிலையுடன் இருப்பார்கள். பெண், பொன், பொருள் என கெட்டலைந்தது பற்றி அருணகிரியார் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதையே நமக்கு எடுத்துரைக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar