Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகவதம் பிறந்த கதை! வாகனங்களுக்கு நைவேத்யம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அரசமரத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2015
02:08

மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படும் அரசமரத்தை காலையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். கீதையில் கண்ணன், மரங்களில் நான் அரசு என்கிறார். திருவாவடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம்) உள்ளிட்ட சிவத்தலங்களிலும், திருப்புல்லாணி (ராமநாதபுரம் மாவட்டம்) போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்சமாக விளங்குகிறது. அரசமரத்துக்கு வடமொழியில் அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அரசமரத்தை வழிபடுவோரின் பாவம் உடனுக்குடன் அழிந்து விடும். அரசமர நிழல், போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரசமரத்தடியில்தான் சித்தார்த்தர், புத்தர் ஆனார். மரமும் போதி மரம் ஆயிற்று. அரசமர நிழல் படும் நீர்நிலைகளில் வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உலகம்மன் சந்நிதி படித்துறையில் அரசமர நிழல் தாமிரபரணி ஆற்றிற்குள் விழுகிறது.திங்கள்கிழமை அமாவாசை வந்தால் அமா சோமவார விரதம் என்பர். அன்று அரசமரத்தை வலம் வருவது மிகவும் புண்ணியம். வைகாசி மாதம் அரசமரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்வது சிறப்பு. தென்காசி அருகிலுள்ள ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் அரச இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அரசமரத்தின் கீழ் அமர்ந்து யோகா செய்வோர் விரைவில் மன ஒருமைப்பாட்டை பெறுவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar