பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
1. ஸம்ப்ராப்த மதுராம் திந அர்த்த
விசமே தத்ர அந்தரஸ்மிந் வஸந்
ஆராமே விஹித அசந: ஸகி ஜநை:
யாத: புரீம் ஈக்ஷிதும்
ப்ராப: ராஜ பதம் சிர ச்ருதி த்ருத
வ்யாலோக கௌதூஹல
ஸ்த்ரீ பும்ஸ உத்யத் அகண்ய புண்ய நிகளை:
ஆக்ருஷ்யமாண: நு கிம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ நடுப்பகலில் மதுரா நகரத்தை அடைந்தாய். அந்த நகரத்தில் இருந்த ஒரு தோட்டத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டாய். அதன் பின்னர் உனது நண்பர்களுடன் சேர்ந்து நகரத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாய். அந்த நகரத்தில் இருந்த பல ஆண்களும் பெண்களும் உன்னைப் பற்றியும் உனது பெருமைகளைப் பற்றியும் கேள்விப்பட்டு, உன்னைக் காண பல நாட்களாகக் காத்திருந்தனர். அவர்கள் முன்வினைப் பயனால் அவர்களுக்கு உண்டான புண்ணியம் என்ற சங்கிலிதான் உன்னைக் கட்டி இழுத்து அந்த நகரத்தின் வீதிகளுக்குக் கொண்டு வந்ததா?
2. த்வத் பாத த்யுதி வத் ஸராக ஸுபகா:
த்வந் மூர்த்திவத யோஷித:
ஸம்ப்ராப்தா விலஸத் பயோதர ருச:
லோலா பவத் த்ருஷ்டிவத்
ஹாரிண்யை: த்வத் உர: ஸ்தலீ வத்
அயி தே மந்த ஸ்மித ப்ரௌடிவத்
நைர்மல்ய உல்லஸிதா: கச ஓக ருசிவத்
ராஜத் கலாப ஆச்ரிதா:
பொருள்: குருவாயூரப்பா! உன்னைக் காண பல பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் எப்படி இருந்தனர். உனது பாதங்கள் போல் சிவந்த நிறமாகவும், உனது திருமேனி போன்ற ஸ்தனங்கள் கொண்டும்; உனது கண்களைப் போல் அங்கும் இங்கும் ஓடுபவர்களாகவும் உனது மார்புகளைப் போன்று அழகான ஆபரணங்கள் அணிந்தவர்களாகவும், உனது புன்னகை போல் வெண்மையான தூய மனம் உடையவர்களாகவும், உனது தலையில் விளங்கும் மயில் பீலி போன்று அவர்கள் கூந்தலில் ஆபரணம் அணிந்தவர்களாகவும் இருந்தனர்.
3. தாஸாம் ஆகலயந் அபாங்க வலநை:
மோஹம் ப்ரஹர்ஷ அத்புத
வ்யாலோலேஷு ஜநேஷு தத்ர ரஜகம்
கஞ்சித் படீம் ப்ரார்த்தயந்
க: தே தாஸ்யதி ராஜகீய வஸநம்
யாஹ இதி தேந உதித:
ஸத்ய: தஸ்ய கரேண சீர்ஷம் அஹ்ருதா:
ஸ: அபி ஆப புண்யாம் கதிம்
பொருள்: குருவாயூரப்பா! நீ உனது மயக்கும் கடைக்கண் பார்வை மூலம் அந்தப் பெண்ணை மகிழ வைத்தாய். உன்னைக் கண்ட அனைவரும் மிகுந்த மகிழ்வும் பேரானந்தமும் அடைந்தனர். அப்போது அந்த வழியாக அரண்மனை வண்ணான் ஒருவன் வந்தான். அவனிடம் நீ ஓர் உடையைக் கேட்டாய். அவனோ, இது அரசனின் உடைகள். இதை உனக்கு யார் கொடுப்பார்கள். உடனே நகர்ந்து செல் என்று விரட்டினான். இதனால் கோபம் கொண்ட நீ அவனது தலையைக் கொய்தாய். ஆயினும் உனது கரம் அவன் மீது பட்டதால் அவன் மோட்சம் பெற்றான் அல்லவா?
4. பூய: வாயகம் ஏகம் ஆயத மதிம்
தோஷேண வேஷ உசிதம்
தாச்வாம்ஸம் ஸ்வ பதம் நிநேத
ஸுக்ருதம் கோ வேத ஜீவ ஆத்மநாம்
மாலாபி: ஸ்தபகை: ஸ்தவை: அபி
புந: மாலாக்ருதா மாநித:
பக்திம் தேந வ்ருதாம் திதேசித பராம்
லக்ஷ்மீம் ச லக்ஷ்மி பதே
பொருள்: மஹாலக்ஷ்மியின் கணவனே! குருவாயூரப்பா! அப்போது மதியூகம் படைத்த தையல்காரன் ஒருவன் உனக்கு ஏற்றதுபோல் ஓர் ஆடையை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அளித்தான். அவனுக்கு, நீ மகிழ்ந்து உனது வைகுண்டத்தை அளித்தாய் அல்லவா? ஒரு ஜீவன் செய்த புண்ணியத்தை யாரால் அறிய இயலும்? அதன் பின்னர் மலர்கள் தொடுப்பவன் ஒருவன் உன்னை மாலைகளாலும் மலர்களாலும் துதித்து வணங்கினான். அவனது செயல் கண்டு மகிழ்ந்த நீ அவனுக்கு சிறந்த பக்தியையும் மிகுந்த செல்வத்தையும் அளித்தாயாமே?
5. குப்ஜாம் அப்ஜ விலோசநாம் பதி புந:
த்ருஷ்ட்வா அங்காராகே தயா
தத்தே ஸாது கில அங்க ராகம் அததா:
தஸ்ய: மஹாந்தம் ஹ்ருதி
சித்தஸ்தாம் ருஜுதாம் அத ப்ரதயிதும்
காத்ரே அபி தஸ்யா: ஸ்புடம்
க்ருஹ்ணந் மஞ்ஜு கரேண தாம் உதநய:
தாவத் ஜகத் ஸுந்தரீம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் தாமரை மலர் போன்று மிகவும் அழகாக விளங்கிய கண்களை உடைய ஒரு கூன் விழுந்த பெண் உனக்குச் சந்தனத்தைப் பூசினாள். அதற்குப் பதிலாக நீ அவளது மனதில் உனது எழிலான திருமேனி மீது உள்ள ஆசையை அதிமாகக் கொடுத்தாய். அவளது உள்ளத்தில் இருந்த நேர்மையை அவளது உடலிலும் அளிக்க எண்ணம் கொண்டு, அவளது கையை உனது கைகளால் மெதுவாகப் பிடித்து, அவளது கூனை நிமிர்த்தினாய். அவள் அப்போது உலகில் சிறந்த அழகியாக மாறினாள் அல்லவா?
6. தாவத் நிச்சித வைபவா: தவ விபோ ந
அத்யந்த பாபா ஜநா:
யத்கிஞ்சித் தததே ஸ்ம சக்தி அநுகுணம்
தாம்பூல மால்ய ஆதிகம்
க்ருஹ்ணாந: குஸும ஆதி கிஞ்சந ததா
மார்க்கே நிபத்த அஞ்ஜலி:
ந அதிஷ்டம் பத ஹா யத: அத்ய
விபுலாம் ஆர்த்திம் வ்ரஜாமி ப்ரபோ
பொருள்: எங்கும் நிறைந்தவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் பாவங்கள் அதிகம் செய்யாத அந்த நகரத்து மக்கள் உனது பெருமையை உணர்ந்தனர். தங்களால் இயன்ற வரை வெற்றிலை, மாலை, சிறு பரிசுகள் ஆகியவற்றை உனக்கு அளித்தனர். நீ அப்படி வரும் பாதையில் நான் மலர்களோ அல்லது வேறு எந்தப் பொருளும் கொடுக்கவோ இல்லையே! அதனால் அல்லவா இப்போது நான் இந்தப் பிறவி பெற்றுத் துன்பம் அனுபவிக்கிறேன்.
7. ஏஷ்யாமீ இதி விமுக்தய: அபி பகவந்
ஆலேப தார்த்யா தயா
தூராத் கதரயா நிரீக்ஷித கதி:
த்வம் ப்ராவிச: கோபுரம்
ஆகோஷ அநுமித த்வத் ஆகம
மஹா ஹர்ஷ உல்லலத் தேவகீ
வக்ஷோஜ ப்ரகலத் பய: ரஸ மிஷாத்
த்வத் கீர்த்தி அந்த: கதா
பொருள்: குருவாயூரப்பா! உனக்கு சந்தனம் பூசிய அந்தக் கூனியிடம், நான் பிறகு வருகிறேன் என்று கூறிச் சென்று விட்டாய். அவள் உன்னை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் நீ வெகு தூரம் செல்லும்வரை நின்று பார்த்தாள். அப்போது நீ கோபுர (கோட்டை) வாயிலுக்குள் நுழைந்தாய். அந்த நேரம் ஏற்பட்ட பெரும் ஆரவாரத்தைக் கேட்ட உனது தாய் தேவகி நீ வந்து விட்டதை யூகித்தாள். அவனது ஸ்தனங்களில் இருந்து தாய்ப்பால் தானாகவே சுரந்தது. இப்படியாகத் தாய்ப்பால் சுரந்தது என்பது, உனது புகழ் நகரத்தில் பரவியது போன்று இருந்தது அல்லவா?
8. ஆவிஷ்ட: நகரீம் மஹா உத்ஸவவதீம்
கோதண்ட சாலாம் வ்ரஜந்
மாதுர்யேண து தேஜஸா நு புருஷை:
தூரேண தத்த அந்தர:
ஸ்ரக்பி: பூஷிதம் அர்ச்சிதம் வர தநு:
மா மா இதி வாதாத் புர:
ப்ராக்ருஹ்ணா: ஸம்ரோபய:
கில ஸமாக்ராக்ஷீ: அபாங்க்ஷீ: அபி
பொருள்: குருவாயூரப்பா! மிகுந்த விழாக்கோலம் பூண்டிருந்த நகரத்திற்குள் நுழைந்த நீ, வில் வைத்திருந்த இடத்திற்குச் சென்றாய். அங்கு நின்ற காவலர்கள் உனது அழகையும் கம்பீரமான ஒளியையும் கண்டு உனக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள் அல்லவரா? அப்போது காவலர்கள், தொடாதே வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே நீ மலர்கள் இடப்பட்டிருந்த அந்த வில்லை எடுத்து வளைத்து அம்பைத் தொடுத்து, உடைத்தும் விட்டாயாமே!
9. ச்வ: கம்ஸ க்ஷபண உத்ஸவஸ்ய புரத:
ப்ராரம்ப தூர்ய உபம:
சாப த்வம்ஸ மஹா த்வநி:
தவ விபோ தேவாந் அரோமாஞ்சயத்
கம்ஸஸ்ய அபி ச வேபது: தத் உதித:
கோதண்ட கண்ட த்வயீ
சண்ட அப்யாதஹத ரக்ஷி பூருஷ ரவை:
உத்கூலித: அபூத் த்வயா
பொருள்: குருவாயூரப்பா! நீ வில்லை முறித்தபோது எழுந்த சத்தம் எப்படி இருந்தது - மறுநாள் நடக்கவிருக்கும் கம்ஸ வதத்திற்கு முன்பு ஒலிக்கப்படும் தூர்யம் என்னும் வாத்திய இசைக்கு ஒப்பாக இருந்தது. அந்த ஒலியால் தேவர்களும் நடுங்கினர். அதனைக் கேட்ட கம்ஸனுக்குப் பயம் பிறந்தது. நீ அந்த வில்லை எடுத்து காவலர்களை அடித்தவுடன் அவர்கள் அலறினார்கள். இதனைக் கேட்ட கம்ஸனின் அச்சம் மேலும் அதிகமாகியது.
10. சிஷ்டை: துஷ்ட ஜநை: ச த்ருஷ்ட
மஹிமா ப்ரீத்யா ச பீத்யா தத:
ஸம்பச்யந் புரஸம்பதம் ப்ரவிசரந்
ஸாயம் கத: வாடிகாம்
ஸ்ரீதாம்நா ஸஹ ராதிகா விரஹஜம்
கேதம் வதந் ப்ரஸ்வபந்
ஆநந்தந் அவதார கார்ய கடநாத்
வாத ஈச ஸம்ரக்ஷ மாம்
பொருள்: ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை நல்லவர்கள் அன்பாலும், தீயவர்கள் அச்சத்தாலும் அறிந்து கொண்டனர். நீ நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தாய். பின்னர் அங்கு இருந்த நந்தவனம் ஒன்றில் இருந்தாய். அங்கு ஸ்ரீதாமன் என்ற நண்பனிடம் ராதையின் பிரிவால் நீ வாடுவதை உணர்த்தினாய், பின்னர் சிறிது நேரம் உறங்கினாய். உனது அவதாரத்தின் காரண நேரம் நெருங்குவதை எண்ணி ஆனந்தம் அடைந்தாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.