ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னிதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். அஷ்ட நாகாபரணம் (எட்டு நாகங்கள்) அணிந்துள்ள இவர், சிறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுகிறது. இவரது சன்னிதி முன்பு சுக்ரீவனும், அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர். மார்கழி திருவாதிரையில் திருநட்சத்திர விழா நடத்துகின்றனர்.