Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ... பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகம்! பழநி திருஆவினன்குடி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓணம் கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
02:08

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப்பூ கோலமிட்டு கேரள மக்கள் கொண்டாடினர். கேரளா மாநிலத்தில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழும் கேரளா மக்கள் பலரும் குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றனர். ஒரு சில கேரளா மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவையொட்டி கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்று வந்தனர். பொள்ளாச்சி டி.நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமூக அறிவியல் மன்றம் சார்பில், அண்டை மாநிலத்தின் கலாசார பண்பாடு, நாகரிகம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மாணவியர் அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி மன்னனை வரவேற்றனர். ஓணம் கொண்டாடுவதன் நோக்கத்தை மாணவியர் தமிழரசி, மஞ்சு, சுபஸ்ரீ கூறினர். கேரள பாரம்பரிய நடனத்தில் ஒன்றான ’திருவாதிரை களி’ என்ற நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சந்திரா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar